‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிப்பு !
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிப்பு !
சென்னை 01 ஜனவரி 2026 இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பொங்கல் திருநாள் முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தளபதி நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படம்தான் தளபதி விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுவதால் இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வம் உலக ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அண்மையில் இந்த ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப்பெரிய அளவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், தளபதி விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 03 ஆம் தேதி அன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு உள்ளனர்.











