நடிகர் பிரபாஸ் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் 230அடி கட்–அவுட்டை வைத்து திருவிழா போல மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.!!

நடிகர் பிரபாஸ் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் 230அடி கட்–அவுட்டை வைத்து திருவிழா போல மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.!!

சென்னை 23 அக்டோபர் 2023 பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகராக பிரபாஸ் உருவெடுத்தார்.

பாகுபலி திரைப்படத்திற்கு பின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட பான் இந்திய நடிகரான ரெபெல் ஸ்டார் பிரபாஸ் இன்று 23 அக்டோபர் 2023 ஆனறு 44வது அகவையை அடி எடுத்து வைக்கிறார்.

ரெபெல் ஸ்டார் பிரபாஸின் பிறந்தநாளை அவருடைய விசுவாசமான ரசிகர்கள் ஹைதராபாத் முழுவதும் பண்டிகை போல கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் பிரபாஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் சலார் நாயகனுக்கு 230அடி கட்–அவுட்டை அவருடைய ரசிகர்கள் மிகவும் அற்புதமாக வடிவமைத்துள்ளனர்

நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் உள்ள கட்-அவுட் ஆக இது இருக்கும் என அவருடைய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்அவுட் கட்டும் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு ஆந்திராவில் அவருடைய ரசிகர்கள் பிரமாண்ட பைக் பேரணியை ஏற்பாடு செய்து
ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களைத் தொடங்கினர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏராளமான ரசிகர்கள் நடிகர் பிரபாஸின் பேனர்கள், கட்அவுட்கள், போஸ்டர்களை எடுத்து வந்து டிஜே உடன் நடனமாடினர்.

தற்போது அவருடைய நடிப்பில் சலார் என்ற திரைப்படமும் மற்றும் கல்கி என்ற திரைப்படமும் மிகப்பிரமாண்டமான அதிக பொருட் செலவில் இரண்டு திரைப்படங்கள் தற்போது உருவாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று அவர் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதையொட்டி சமூக வலைதளங்களில் மூலமாகவும் பலர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!