ரெட் ஜெயன்ட் மூவிஸ்  திரு M. செண்பகமூர்த்தி, அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ்  திரு M. செண்பகமூர்த்தி, அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்!!

சென்னை 09 செப்டம்பர் 2023 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது.

ஜெயிலர் திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு அர்ஜூன் துரை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.