Thursday, January 21
Shadow

எனக்கு சேர வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்தால்தான் கடிதம் வாபஸ் பெறப்படும்” – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

சென்னை 12 ஜனவரி 2021

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் பாரதிராஜா, பாலசரவணன் & நிதி அகர்வால் நடித்துள்ள திரைப்படம்தான் ‘ஈஸ்வரன்’.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிலம்பரசன் டிஆர் நடித்த ஈஸ்வரன்’ திரைப்படம் நாளை மறுநாள் 14ஆம் தேதி ரிலீசாகிறது.

இதனிடையில் இன்று மாலை சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

அப்போது அவர் பேசியதாவது…

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்பட இழப்பீடாக சிம்பு மற்றும் டி ஆர் தரப்பு தனது சம்பளத்தில் ஒரு படத்துக்கு 2.4 கோடி வீதம் 3 படத்துக்கு 7.2 கோடி எனக்கு தருவதாக சொன்னார்கள்.

அந்த வகையில் முதலில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் மூலம் கொடுப்பதாக சிலம்பரசன் டிஆர் கூறினார்கள்.

ஆனால் அந்த தொகை ரூ.2.4 கோடியை இன்னும் எனக்கு தரவில்லை.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையை சிலம்பரசன் டிஆர் தரப்பினர் இன்னமும் தராததால் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது…” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது.

அதனால் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தை வெளியிட கூடாது புகார் அளித்துள்ளார்.

இதனால் ஈஸ்வரன் ரிலீசாகுமா? என்ற குழப்பமே நீடிக்கிறது.

மேலும் “இந்தப் பண பிரச்சினை நல்லபடியாக முடிந்தது விட்டால், கியூப்பிற்குக் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்குவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் கூடி முடிவெடுக்கும். இதில் நடப்பு தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் பெடரேசனும் இணைந்து பேசி முடிவெடுக்கும்…” என்றார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

CLOSE
CLOSE