குட் நைட் திரைப்படத்தின் இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!
குட் நைட் திரைப்படத்தின் இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!
சென்னை 18 ஜூன் 2025 சென்னை 18 ஜூன் 2025 இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்த “அமரன்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்திலும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது ‘குட் நைட்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.











