குட் நைட் திரைவிமர்சனம் ரேட்டிங்:-4.25./5.

நடிகர் & நடிகைகள் :- மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், உமா ராமசந்திரன், ரேச்சல் ரெபேக்கா, ஸ்ரீ ஆர்த்தி, பக்ஸ், கௌசல்யா நடராஜன், ஜெகன் கிருஷ்ணன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விநாயக் சந்திரசேகரன்.

ஒளிப்பதிவு :- ஜெயந்த் சேது மாதவன்.

படத்தொகுப்பு :-  பரத் விக்ரமன்.

இசை :- சியான் ரோல்டன்.

தயாரிப்பு நிறுவனம் :-  மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ். எம் ஆர் பீ என்டர்டைன்மென்ட்.

தயாரிப்பாளர் :- நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்.

ரேட்டிங் :- 4.25 / 5.

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வாரம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக  எதார்த்த நாயகன் மணிகண்டன் நடிப்பில் குட்நைட் திரைப்படம் வந்திருக்கிறது.

இந்த குட் நைட் திரைப்படத்தில் ஆரம்பக்காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை திரைப்பட ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது ரசிகர்கள் அனைவரையும்  கண்டிப்பாக மகிழ்விக்கும். ஒரு மனிதனுக்கு குறட்டை விடுவதால் எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்பதை பற்றியும் ஒரு  ராசி இல்லாத ஒருவரை எப்படி எல்லாம் மக்கள் பழிப்பார்கள் என்பதையும் கருவாக வைத்துக் அருமையான் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

தாய், தங்கை அக்கா, மற்றும் அக்கா கணவர் என மிகவும் எளிமையான கூட்டு குடும்பத்தில்  கதையின் நாயகன் மணிகண்டன் வாழ்ந்து வருகிறார் 

கதையின் நாயகன் மணிகண்டனுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது.

உறக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருப்பதால் பல்வேறு இடங்களுககு அவர் செல்லும் போது பார்த்து பார்த்து நடந்து கொள்கிறார்.

உறக்கத்தில் குறட்டை விடும் பிரச்சனை இருப்பதால் பல இடங்களில் அசிங்கப்படுகிறார் அவமானப்படுகிறார்.

கதையின் நாயகன் மணிகண்டனும் அவர் காதலிக்கும் பெண்ணும் பஸ்ஸில் ஒன்றாக பயணிக்கும் போது மணிகண்டன் பஸ்ஸில் தூங்கும் போது குறட்டை சத்தத்தினால் காதலிக்கும் பெண் ஒரு நாள் பயணத்திலே உன்னிடம் வாழ முடியவில்லை காலம் முழுவதும் உன்னுடன் எப்படி வாழ முடியும் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்.

இதனிடையே தனது மாமாவுடன் வாட்டர் பியூரி ஃபையர் சர்வீஸ் செய்வதற்கு ஒரு வீட்டிற்கு செல்லும் போது கதையின் நாயகி மீத்தா ரகுநாத்தை சந்திக்கும் கதையின் நாயகன் மணிகண்டன் அவர் மீது கண்டவுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

கதையின் நாயகி மீத்தா ரகுநாத், யாரிடம் நெருங்கி பழகினாலும் அவர்கள் இறந்து விடுவார் என்ற பயத்தினால் யாரிடமும் நெருங்கி பழகாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

ஒருவழியாக கதையின் நாயகன் மணிகண்டனும் கதையின் நாயகி மீத்தா ரகுநாதுக்கும் திருமணம் நடந்து விடுகிறது.

அதன்பின்னர் கதையின் நாயகன் மணிகண்டன் இரவு தூங்கும் போது குறட்டை விடும் சத்தத்தினால் கதையின் நாயகி மீத்தா ரகுநாதுக்கு இரவு நேரங்களில் தூக்கம் இல்லாததால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இறுதியில் கதையின் நாயகி மீத்தா ரகுநாத்க்கும் கதையின் நாயகன் மணிகண்டன் விடும் குறட்டை சத்தத்திலிருந்து மீண்டாரா? மீலவில்லையா? என்பதுதான் இந்த குட்நைட் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குட் நைட் திரைப்படத்தில் கதையின் நாயகனாக மணிகண்டன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக வரும் மணிகண்டன் அவருடைய எதார்த்த நடிப்பின் மூலம் திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து கைத்தட்டல் பெறுகிறார்.

கதையின் நாயகன் மணிகண்டனுக்கு இருக்கும் குறட்டை பிரச்சனையால் நண்பர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கிண்டல்களுக்கு கேலிக்கும் அவமானப்படுவதும், அசிங்கப்படுவது என பல பரிணாமங்களில் நடிப்பை மிகவும் அழகாக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

குட் நைட் திரைப்படத்தில் கதையின் நாயகியாக மீத்தா ரகுநாத் நடித்துள்ளார்

கதையின் நாயகி மீத்தா ரகுநாத் அழகான அருமையான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார்

பல காட்சிகளில் நம்ம குடும்பத்தில் உள்ள பெண் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதையின் நாயகன் மணிகண்டனின் மாமாவாக வரும் ரமேஷ் திலக் மிக மிக அருமையாக நடித்துள்ளார்..

மாமா மச்சானுடன் ஜாலியாக உரையாடும் பல காட்சிகளில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கிறார்.

நமது குடும்பத்தில்இப்படிப்பட்ட மாமாவும் மச்சானும் இல்லை என்று ஏங்க வைக்கிறார்கள்.

நாயகன் மணிகண்டனுக்கு சகோதரியாக வரும் ரேச்சல் ரெபேக்கா எதார்த்தம் நடிப்பை கொடுத்து மிகவும் அருமையாக அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல், மற்றும் பகவதி பெருமாள் என அனைவரும் அவர்களின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனின் சிறப்பான ஒளிப்பதிவு திரைப்படத்தில் கதைக்கு ஏற்றவாறு காட்சிகளும் மிகவும் அருமையான உழைப்பை கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரைப்படத்தின் மிகப்பெரிய அளவில் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது.

சாதாரண எதார்த்தமான மனிதர்களுக்கு ஏற்படும் குறட்டை பிரச்சனையால் என்ன என்ன விளைவுகளை இருக்கிறது என்பதை கதையின் மையக்கருவாக வைத்து இநத திரைப்படத்தை மிகவும் அருமையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

கதை மற்றும் மிகவும் அருமையான திரைக்கதையும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு, காமெடி கலந்த வசனங்கள் என அனைத்தையும் சரியாக கையாண்டு பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

மொத்தத்தில் குட் நைட் திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய அருமையான திரைப்படம்.