சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படம் பார்க்க கல்லூரி முதல்வரிடம் விடுமுறை கேட்ட மாணவர்கள்!!!

சென்னை 30 ஆகஸ்ட் 2022 சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படம் பார்க்க கல்லூரி முதல்வரிடம் விடுமுறை கேட்ட மாணவர்கள்!!!

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள், நாளை வெளியாக உள்ள நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படத்துக்கு திரைப்படம் வெளியாகும் அன்று எங்களுக்கு டிக்கெட் கிடைக்காததால், தாங்கள் 1-ஆம் தேதி திரைப்படத்தை பார்க்க உள்ளதாகவும், இதனால் அன்றைய தினம் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என குறிப்பிட்டு அந்த கல்லூரி முதல்வருக்கு மாணவர்கள் அனைவரும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்கள்.

அன்றைய தினம் தாங்கள் கல்லூரிக்கு வராவிட்டால், தங்களது பெற்றோருக்கு போன் செய்துவிட வேண்டாம் என்றும் மாணவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.