கோப்ரா திரைப்படத்தின் டிசர் சியான் விக்ரம் பிறந்த நாள் அன்று வெளியாகுமா.?

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் கோப்ரா.

சியான் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ரெட்டி கதாநாயகியாக நடிக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் வியாகாம் 18 நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லன் வேடத்தில் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் இந்த கோப்ரா திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.

கோப்ரா பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி விக்ரம் ரசிகர்களிடையே இப்பட ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று சியான் விக்ரம் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

எனவே பிறந்த நாள் அன்று கோப்ரா பட டீசர் வெளியாகுமா என்று சியான் விக்ரம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவால் டீசரை தற்போது வெளியிட வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது

error: Content is protected !!