அள்ளிக் கொடுத்த ஸ்டண்ட் இயக்குநர்! – சினிமா நிருபர்கள் மனதில் ஹீரோவானார்.!
கொரொனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் சினிமா மற்றும் ஊடகத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிறுவனம் சாராத சினிமா நிருபர்களும், புகைப்பட நிருபர்கள் மற்றும் வீடியோ நிருபர்கள், மூத்த சினிமா நிருபர்கள் என ஏராளமானவர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கொடூரமான கொரோனா மூலம் வறுமையில் சிக்கிக் கொண்டிருக்கும் சினிமா நிருபர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலர், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் மூலம் பொருட்களாகவும், பணமாகவும் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல ஸ்டண்ட் இயக்குநரும், வில்லன் நடிகருமான ஸ்டண்ட் சில்வா சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு அள்ளிக் கொடுக்கும் விதமாக ரூபாய்.1 லட்சம் நிதி வழங்கி, தான் சினிமாவில் மட்டும் தான் வில்லன், நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார். ஸ்டண்ட் இயக்குனர் சில்வா
இந்தியாவையே தனது ‘பாகுபலி’ படம் மூலம் வியக்க வைத்த எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ’யமடூங்கா’ (Yamadonga) படம் மூலம் சண்டைப்பயிற்சி இயக்குநராக அறிமுகமான ஸ்டண்ட் சில்வா, தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியதோடு, தற்போதும் பல மொழிகளில் பணியாற்றி வருகிறார்.
அஜித்குமார், தளபதி விஜய், சூர்யா, சியான் விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், பிரித்விராஜ், மோகன்லால், மம்மூட்டி என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கு பிடித்த பேவரைட் ஸ்டண்ட் மாஸ்டரான சில்வாவிடம் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின், செயற்குகுழு உறுப்பினர் சரண், சினிமா பத்திரிகையாளர்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களது சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு, முடிந்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக்கொண்ட ஸ்டண்ட் சில்வா, எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ரூபாய்.1 லட்சத்தை நன்கொடையாக இன்று வழங்கியிருக்கிறார்.
ஸ்டண்ட் இயக்குனர் சில்வாவின் இந்த தாரள குணத்திற்காக ஒட்டு மொத்த சினிமா பத்திரிகையாளர்கள் சார்பாக சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் சார்பாகவும் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.











