இயக்குநர் இமயம் பாரதிராஜா  அவர்களின் கலைப் பெருமையைப் போற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!”

இயக்குநர் இமயம் பாரதிராஜா  அவர்களின் கலைப் பெருமையைப் போற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!”

சென்னை 25 ஆகஸ்ட் 2026 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் அவர்களுக்கு,
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது பணிவான வணக்கங்களையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேனியில் தமிழக அரசின் சார்பில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று எங்களது கோரிக்கையை தங்களிடம் முன்வைத்திருந்தோம்.

எங்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று, இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் நினைவாக தேனியில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

தமிழ்த் திரைப்படக் கலைக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் கலைஞரின் நினைவைப் போற்றும் இந்த அறிவிப்பு, அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், குறிப்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

எங்களது கோரிக்கையை ஏற்று, பாரதிராஜா அவர்களின் கலைப் பங்களிப்பையும், தமிழ்த் திரையுலகின் வரலாற்றையும் மதித்து இந்தச் சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட தங்களுக்கு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது இதயப்பூர்வமான நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மணிமண்டபம், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் நினைவை மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் வரலாற்றையும், அதன் மகத்தான கலைஞர்களின் பங்களிப்பையும் எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு வரலாற்றுச் சின்னமாகத் திகழும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நன்றி. 
இப்படிக்கு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்.கே. செல்வமணி (தலைவர்), ஆர்.வி. உதயகுமார் (பொதுச்செயலாளர்) ம. பேரரசு (பொருளாளர்)

error: Content is protected !!