‘தி பெட்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், திவ்யா, ஜான் விஜய், தேவி பிரியா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ். மணிபாரதி.
ஒளிப்பதிவாளர் :- கே.கோகுல்.
படத்தொகுப்பாளர் :- ஜே.பி.
இசையமைப்பாளர் :- தாஜ்னூர்.
தயாரிப்பு நிறுவனங்கள் :- ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் & ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கே.கந்தசாமி, கே.கணேசன், வி.விஜயகுமார், வி.லோகேஸ்வரி விஜயகுமார்
ரேட்டிங் :- 2.5./5.
சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் கதாநாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் மூன்று நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு , விக்ரம், வாரக் கடைசியில் ஜாலியாக இருப்பதற்காக விலை மாதுவான கதாநாயகி சிருஷ்டி டாங்கேவை பணம் கொடுத்து அழைத்து கொண்டு ஊட்டிக்கு செல்கிறார்கள்.
ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் அறை எடுத்து தங்கும் கதாநாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் மூன்று நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு , விக்ரம், விலை மாதுவான கதாநாயகி சிருஷ்டி டாங்கேவிடம் பெட்டில் ஜாலியாக இருப்பதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக குடித்து விட்டு போதையில் அனைவரும் தூங்கி விடுகிறார்கள்.
அதேபோல் மறுநாளும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு அழைத்துச் சென்ற விலை மாதுவான கதாநாயகி சிருஷ்டி டாங்கேவை தொடர முடியாமல் கதாநாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் மூன்று நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு , விக்ரம், போதை தலைக்கேறி மட்டையாகி விடுகிறார்கள்.
இந்த நிலையில் மறுநாள் காலை அனைவரும் எழுந்து விலை மாதுவான கதாநாயகி சிருஷ்டி டாங்கே தேடும்போது ரூமில் இல்லாததைக் கண்டு அதிர்ந்து விடுகிறார்கள்.
கதாநாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் மூன்று நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு , விக்ரம், நண்பர்கள் ஒருவர் மற்றும் விலை மாதுவான கதாநாயகி சிருஷ்டி டாங்கே இருவரும் காணாமல் போய்விடுகிறார்.
காணாமல் போன விலை மாதுவான கதாநாயகி சிருஷ்டி டாங்கே மற்றும் நான்கு நண்பர்கள் ஒரு நண்பரை தேடி அலைகிறார்கள்..
இதனிடையே காணாமல் போன கதாநாயகன் ஸ்ரீகாந்தின் நண்பர் சுடலமாக காவல்துறையினரால் மீட்கப்படுகிறார்.
காணாமல் போன விலை மாதுவான கதாநாயகி சிருஷ்டி டாங்கேவின் என்னவாயிற்று ? தனது நண்பனை கொன்றது யார்? என்பதுதான் திரைப்படத்தின் தி பெட் மீதிக்கதை.
இந்த “தி பெட்” திரைப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்.
ஐடி ஊழியர்கள் புத்தகத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த “தி பெட்” திரைப்படத்தில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.
விலைமாது கதாபாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே மாறுபட்ட சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.
இளமை துள்ளலுடன் ஜிவ்வென கவர்ச்சி உடையில் அனைத்து காட்சிகளும் கதாநாயகி சிருஷ்டி டாங்கே தனது கதாபாத்திரத்தை கிக் ஏற்றும் வகையில் செய்திருப்பதும் எந்த தயக்கமும் காட்டாமல் கதாநாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் மூன்று நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு , விக்ரம், உள்ளிட்ட அனைவரையும் டபுள் மீனிங்கில் வசனங்கள் பேசி படுக்கை சல்லாபத்துக்கு அழைத்து தயாராக இருப்பது போல் காட்டுவதெல்லாம் அசல் விலைமாது கதாபாத்திரமாகவே மாறி கதாபாத்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்.
கதாநாயகன் ஸ்ரீகாந்தின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு , விக்ரம், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவி பிரியா கதாநாயகி சிருஷ்டி டாங்கே தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே. கோகுலின் ஒளிப்பதிவு மூலம் ஊட்டியின் அழகை இன்னும் கூட கண்களுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக காட்சிப்படுத்தியிருந்தால் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும்.
இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.
காமத்திற்காக அணுகிய விலை மாறிவிடும் காதலை சொல்வது தமிழ் திரைப்பட உலகில் பழகிய கதை தான் என்றாலும் திரைக்கதையில் கிரைம் மற்றும் திரில்லர் என திரைப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.மணிபாரதி.
மொத்தத்தில், இந்த “தி பெட்” – திரைப்படம் காமத்திற்கு அழைத்து சென்ற பெண்ணை காதலிக்கும் கதை.











