“லவ் மேரேஜ்” திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சண்முக பிரியன்.
ஒளிப்பதிவாளர் :- மதன் கிறிஸ்டோபர்.
படத்தொகுப்பாளர் :- பரத் விக்ரமன்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனம் :- அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்.
தயாரிப்பாளர்கள் :- DR.சுவேதா ஸ்ரீ & ஸ்ரீநிதி சாகர்.
ரேட்டிங் :- 3./5.
உசிலம்பட்டியில் தாய் தந்தை மற்றும் சகோதரி வாழ்ந்து வரும் கதாநாயகன் விக்ரம் பிரபுக்கு, பல ஊர்களில் திருமணத்திற்கு பெண் பார்த்து 33 வயதாகியும் திருமணம் நடக்காமல் இருந்து வருகிறார்.
கதாநாயகன் விக்ரம் பிரபுக்கு, 33 வயதாகியும் எந்த பெண்ணும் அமையாததால், இவரது உறவினர்கள், மற்றும் ஊரில் உள்ள அனைவரும் எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில் கோபிச் செட்டிபாளையத்தில் இருக்கும் கதாநாயகி சுஷ்மிதாவை கதாநாயகன் விக்ரம் பிரபுக்கு இரு வீட்டு பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்படுகிறது.
கோபிச் செட்டிபாளையத்தில் உள்ள கதாநாயகி சுஷ்மிதாவை திருமணத்துக்கு நிச்சயம் செய்வதற்காக கதாநாயகன் விக்ரம் பிரபுவின் குடும்பத்தினர் அனைவரும் கோபிச் செட்டிபாளையத்திற்கு செல்கிறார்கள்.
கதாநாயகன் விக்ரம் பிரபு கதாநாயகி சுஷ்மிதா இருவருக்கும் திருமணத்திற்கு நிச்சயம் செய்த பின் ஊரடங்கு உத்தரவு (லாக் டவுன்) திடீரென போட்டதால் கதாநாயகன் விக்ரம் பிரபுவின் சொந்த பந்தங்கள் அனைவரும் கதாநாயகி சுஷ்மிதாவின் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
ஊரடங்கு உத்தரவு (லாக்டவுன்) இருப்பதால் ஒரே வாரத்தில் திருமணம் நடத்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் கதாநாயகி சுஷ்மிதா வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.
இறுதியில் 33 வயதாகியும் திருமணம் நடக்காமல் திருமணம் கனவோடு இருக்கும் கதாநாயகன் விக்ரம் பிரபுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? கதாநாயகி சுஷ்மிதா எதற்காக வீட்டை விட்டு ஓடினார்? என்பதுதான் இந்த லவ் மேரேஜ் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த லவ் மேரேஜ் திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.
லவ் மேரேஜ் திரைபபடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, பெண் பார்க்க செல்வது, பெண்ணுடன் பேச தயங்குவது என திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
இந்த லவ் மேரேஜ் திரைப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மிதா பட் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா பட், அமைதியான வந்து மிகவும் அழகான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ், துறுதுறு நடிப்பால் ரசிகர்களை அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.
கதாநாயகன் விக்ரம் பிரபுவுடன் கதாநாயகி சுஷ்மிதா பட் பேசும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது.
கதாநாயகன் விக்ரம் பிரபுவின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்தாஸ், கதாநாயகன் விக்ரம் பிரபுவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக், கதாநாயகி சுஷ்மிதா பட் தாய் மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முருகானந்தம் கதாநாயகன் விக்ரம் பிரபுவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஜராஜ், ஜோதிடர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோடாங்கி வடிவேலு, கதாநாயகி கதாநாயகி சுஷ்மிதா பட் மற்றும் மீனாட்சி தினேஷ் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வின்னர் ராமசந்திரன் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
85 90 கால கட்டங்களில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கையில் 30 வயது கடந்த ஒரு இளைஞன், திருமணம் ஆகாமல் இருந்தால், அவர்கள் சந்திக்கும் பிரச்சனை, ஊர் கேட்கும் கேள்விகள் என கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சண்முகப்பிரியா.
மொத்தத்தில் லவ் மேரேஜ் திரைப்படம் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம்.











