தினசரி திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்டே, எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி, பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், KPY. சரத், நவ்யா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சங்கர் ஜி.

ஒளிப்பதிவாளர் :- ராஜேஷ் யாதவ்.

படத்தொகுப்பாளர் :- என்.பி. ஸ்ரீகாந்த்.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- சிந்தியா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- சிந்தியா லூர்டே.

ரேட்டிங் :- 2.5./5.

தந்தை எம் எஸ் பாஸ்கர் மற்றும் தாய் மீரா கிருஷ்ணன், சகோதரி வினோதினியுடன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் ஸ்ரீகாந்த் ஐடி நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து வருகிறார்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கதாநாயகன் ஸ்ரீகாந்துக்கு புதிதாக வீடு கட்ட வேண்டும் என, கனவு மற்றும் தினசரி வீட்டு செலவு, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு என ஐடி நிறுவனத்தில் வரும் சம்பளம் இதற்கே சரியாகி விடுகிறது.

இந்த நிலையில், இதையெல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால் வேலைக்கு செல்லும் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் ஸ்ரீகாந்த் இது நடந்தால் மட்டும் தான் தன்னால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என நம்புகிறார்.

இந்த நிலையில் வேலைக்குச் செல்லும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவியாக்க வேண்டும் என தேடி வருகிறார்.

இந்த சூழலில் தந்தை எம்எஸ் பாஸ்கரன் மற்றும் அவரது தாய் மீரா கிருஷ்ணனும் சகோதரி வினோதினியும் சேர்ந்து கதாநாயகி சிந்தியா லூர்டே, திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

கதாநாயகி சிந்தியா லூர்டேயை பெண் பார்க்க செல்லும் கதாநாயகன் ஸ்ரீகாந்தின் தந்தை எம்எஸ் பாஸ்கரன் மற்றும் அவரது தாய் மீரா கிருஷ்ணனும் சகோதரி வினோதினிடம் கதாநாயகி சிந்தியா லூர்டே ஒரு கண்டிஷன் ஒன்று போடுகிறார்

நான் திருமணத்திற்கு பின்பு நான் வேலைக்கு செல்ல மாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே கூறிக்கொண்டு கதாநாயகி சிந்தியா லூர்டே திருமணத்திற்கு சம்மதிக்கிறார்

திருமணத்திற்கு பிறகு முதல் இரவில் தான் கதாநாயகன் ஸ்ரீகாந்திற்கு கதாநாயகி சிந்தியா லூர்டே வேலைக்கு செல்ல மாட்டார் என தெரிகிறது.

இந்த நிலையில் கதாநாயகன் ஸ்ரீகாந்த் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து வந்த நிதி நிறுவனம் இழுத்து மூடப்படுகிறது.

இதனால் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவரும் பணமும் கிடைக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள்.

முதலீடு செய்த நிதி நிறுவனம் இழுத்து மூடப்பட்டது கதாநாயகன் ஸ்ரீகாந்துக்கு தலையில் இடி விழுந்தது போல் இருக்கும் நிலையில் அடுத்த தலையில் விழும் இடியாக தன் பணிபுரியும் ஐடி நிறுவனத்தில் வேலையும் பறி போகிறது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகன் ஸ்ரீகாந்துக்கு கடன் கொடுத்த கடன்காரர்கள் அனைவரும் கதாநாயகன் ஸ்ரீகாந்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

அதற்குப் பின்பு கடன்காரர்கள் இடம் இருந்து தப்பித்தாரா? தப்பிக்க வில்லையா? என்பதுதான் இந்த தினசரி திரைப்படத்தின் மீதி கதை.

இந்த தினசரி திரைப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஸ்ரீகாந்த் ஒரு எளிமையான குடும்பத்தில் ஒரு நபர் எப்படி எல்லாம் இன்னல்களை சந்திப்பார் என்பதை தனது சக்திவேல் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய அளவில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

இந்த தினசரி திரைப்படத்தில் கதாநாயகியாக சிந்தியா லூர்டே நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சிந்தியா லூர்டே நடிக்க வருவதற்கு முன் கொஞ்சம் பயிற்சி எடுத்து விட்டு நடிக்க வந்திருக்கலாம்.

ராதாரவி ஒரு சில காட்சியில் வந்தாலும் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் ஸ்ரீகாந்தின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர் தனது திறமையான நடிப்பில் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.

கதாநாயகன் ஸ்ரீகாந்தின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோதினி, நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம்ஜி, தரகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாம்ஸ், கே பி ஒய் சரத் அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து அருமையாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு மூலம் சிறப்பு செய்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பழைய பாடல்கள் மீண்டும் ஆங்காங்கே ஒலித்தது மிகச்சிறப்பாக இருந்தது.

பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

இன்று சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து அருமையான கதையை கையில் எடுத்த இயக்குனர் சங்கர் ஜி திறக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில்,- இந்த ”தினசரி” திரைப்படம் சமுதாயத்தில் உள்ள மக்கள் படும் இன்னல்கள் கண் முன் காண்பித்திருக்கிறார்.

error: Content is protected !!