நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது!
நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது!
சென்னை 21 ஏப்ரல் 2026 நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய டிரெய்லர் பல அழகிய தருணங்களைக் கொண்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய டிரெய்லர் பல உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் படத்தை மீண்டும் பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு கூட புது அனுபவத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. இந்த டிரெய்லர் ஆக்ஷனை மட்டும் மையமாக மட்டுமே கொள்ளாமல், கதையின் உணர்ச்சி ஆழத்தையும் காதலையும் முன்னிறுத்தி வெளியாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சங்களில் ஒன்று அஜித்குமார் மற்றும் மறைந்த திறமையான நடிகர் ரகுவரன் இருவருக்கும் இடையிலான ஃபேஸ்- ஆஃப் காட்சிகள்.
பரத்வாஜ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஹிட். குறிப்பாக, எவர்கிரீன் டிராக்கான ‘உன்னோடு வாழாத’ பாடல் இப்போதும் பல காதலர்களுக்கு காதல் கீதம். துள்ளல், ஆத்மார்த்தமான மெலோடிஸ் மற்றும் உணர்வுப்பூர்வமான பாடல்கள் என படத்தின் ஆல்பம் இப்போதும் இசை ஆர்வலர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளது.
டிரெய்லருக்கு கிடைத்துள்ள பாசிட்டிவான ரெஸ்பான்ஸை அடுத்து ஏப்ரல் 24 அன்று மறுவெளியீடு செய்யப்படும் ‘அமர்க்களம்’ படம் பழைய ரசிகர்களுக்கு நினைவுகளை மீட்டெடுக்கும் அனுபவமாகவும், இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும் அமையும்.
Related posts:
நடிகர் ஜெயம் ரவியின் நடிக்கும் ‘பூமி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் அஜித் குமாரின் ‘அமர்க்களம்’ திரைப்படம் ஏப்ரல் 24 2026 அன்று 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகிறது!
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புப் பெற்று வருகிறது!
கிச்சா சுதீப் நடித்த அதிரடி படம் MAX கன்னடத்தில் பிளாக்பஸ்டர் மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது !
ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டிரெய்லர் !
இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி- நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது!
நடிகர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.!
நடிகர் அருள்நிதி நடகை துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!!
காதல் என்பது பொதுவுடமை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜெய் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் – நடிகை ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

