இயக்குனர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் நடிகர் ஆரி அர்ஜூனன் நடிப்பில் ‘Fourth Floor’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!!

இயக்குனர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் நடிகர் ஆரி அர்ஜூனன் நடிப்பில் ‘Fourth Floor’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!!

சென்னை 06 பிப்ரவரி 2026 தமிழ் திரைப்பட உலகில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஆரி அர்ஜூனன் தற்போது  பிரபல தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இதன்மூலம் திரைப்பட உலகில் பிரபலமும் ஆனார்.

இயக்குனர் தாமிரா இயக்கத்தில் 2010 ஆண்டு வெளியான ‘ரெட்டச்சுழி’ இயக்குநர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ஆரி அர்ஜூனன் இந்த திரைப்படம் மூலம் அறிமுகமானார்

அதன் பிறகு மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, 
தரணி, மாயா, நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஆரி அர்ஜூனன்
இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘போர்த் ப்ளோர்’ (Fourth Floor).

இயக்குனர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ராஜா இந்த  ‘போர்த் ப்ளோர்’ (Fourth Floor) திரைப்டத்தை தயாரித்துள்ளார்.

இந்த’போர்த் ப்ளோர்’ (Fourth Floor) திரைப்படத்தில் கதாநாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, கதாநாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார்.

மேலும், பவித்ரா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தரண் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை வருகிற 27-ந்தேதி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ‘போர்த் ப்ளோர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை திரையுலக பிரபலங்கள் 05 பிப்ரவரி 2026 அன்று வெளியிட்டனர்.

இந்த இந்த’போர்த் ப்ளோர்’ (Fourth Floor) திரைப்படம் அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தற்கொலைகளை சுற்றி நிகழும் சம்பவங்களே திரில்லராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!