தனது தந்தையின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா.!

சென்னை 27 ஆகஸ்ட் 2022 தனது தந்தையின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா.!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநா் பாரதிராஜா அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

இயக்குநா் இமயம் பாரதிராஜாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு நீா்ச்சத்து குறைபாடு இருப்பதால் மருத்துவா்கள் அவருக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை என்று அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனது தந்தையின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது என்று அவருடைய மகன் மனோஜ் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னா், குடும்பத்தினா் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு இயக்குநா் பாரதிராஜா தற்போது மாற்றப்பட்டுள்ளாா்.

அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இயக்குநா் இமயம் பாரதிராஜா தரப்பில் அறிக்கை…

என் இனிய தமிழ் மக்களே
வணக்கம்.

நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்.

உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என அந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!