கார்த்திக் டயல் செய்த எண்.; சிம்புவுடன் பேசிய த்ரிஷா வீடியோ இதோ.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் படப்பிடிப்பு முற்றிலும் நிறத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலும் தனது வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் த்ரிஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து இயக்கியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.
சில தினங்களுக்கு முன் இந்த வீடியோ வெளியானது.
இந்த நிலையில் சில எடிட்டிங் பணிகள் செய்த பிறகு சில நொடிகள் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த குறும்படத்திற்கு கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் சிம்புவும் நடித்திருக்கிறாராம். மேலும் ஏஆர். ரஹ்மான் இதற்கு இசையமைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆக.. லாக்டவுனில் ஒவ்வொருவரும் தங்கள் இடங்களில் இருந்தே தங்கள் பங்களிப்பை செய்து வருவது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.











