நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை 29 ஜூலை 2021 நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி.
நடிகர் கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக், தற்போது மற்ற நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்த கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டதால் காலில் உள்ள எலும்பில் சிறிது விரிசல் ஏற்பட்டது.
உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
தற்போது நவரச நாயகன் நடிகர் கார்த்திக் அவர்கள் ஓய்வு எடுத்து வருகிறார்கள்.
இதையடுத்து உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி. pic.twitter.com/EjVZ3W7Pa9
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) July 29, 2021