கொரோனா நிவாரண நிதியுதவியை இந்திய முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு பிரிந்து வழங்கிய தளபதி விஜய்.!

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ம் தேதி வரை போடப்பட்டுள்ளது..

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உலகம் முழுவதும் நிறைய பேர் உயிரிழந்து வருகிறார்கள்.

இதனை கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் அந்தந்த மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய்யும் தற்போது (ஒரு மாதத்திற்கு பிறகு) இன்று கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க நிவாரண நிதியை இந்தியா முழுவதும் பிரித்து வழங்கியுள்ளார்.

இதனை அவரது மக்கள் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது தளபதி நடிகர் விஜய் அளித்து நிவாரண நிதி தொகை விவரம் வருமாறு….

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம் கொடுத்துள்ளார்.

தமிழகம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் கொடுத்துள்ளார்.

கேரளா மாநிலத்திற்க்கு நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம்

தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனதிற்க்கு ( பெப்சி ) சேர்ந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கியிருக்கிறார்

ஆந்திரா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய். 5 லட்சம் வழங்கியிருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் அளித்திருக்கிறார்.

கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் அளித்திருக்கிறார்.

புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் அளித்திருக்கிறார்.

ஆக மொத்தம் ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக பிரித்து வழங்கியுள்ளார்.

இவையில்லாமல் ரசிகர்கள் மக்கள் மன்றம் மூலமாகவும் தளபதி நடிகர் விஜய் உதவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

அவர் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரசிகர்களும் நிர்வாகிகளும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!