கொரோனா வைரஸ் நோய் தடுக்க சன் குழுமம் 10 கோடி ரூபாயும் ஏஜிஎஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கியிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுக்க உலக நாடுகள் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அரசுக்கு உதவும் விதமாக இங்குள்ள பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் நிவாரண நிதி உதவி அளித்து வருகின்றனர்.
நடிகர்களில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அதிகபட்சமாக 25 கோடி ரூபாயை தருவதாக அறிவித்து இருந்தார்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக சன் டிவி குழுமம் 10 கோடி ரூபாயை கொடுத்து உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் சன் டிவி குழுவில் உள்ள ஆராயிரம் பணியாளர்களின் ஒருநாள் ஊதியத்தை மத்திய அரசுக்கும் மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு நிதியாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி புரிந்து வரும் தன்னார்வ அமைப்புகளுடன் சன் குழுமம் பணியாற்றும் என்று திரைத்துறை தொலைக்காட்சியில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு சன் டிவி குழுமம் நிதியுதவி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தா திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ரூபாய் ஐந்து லட்சத்தை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் ரூபாய் 15 லட்சத்தை திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு ( பெப்சி ) வழங்கியுள்ளனர்.











