கொரோனா நிவாரணம் பிரதமர் நிதிக்கும் முதல்வர் நிதிக்கும் பெப்சி நிதிக்கும் அஜித் குமார் 1.25 கோடி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
மத்திய அரசும் மாநில அரசும் இந்த குருநாதர் அரசை தடுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
திரைப்பட படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை எனவே பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமே முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சத்தை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தனது சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு நிதிகளை வழங்கியுள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும் மற்றும் பெப்சி திரைப்பட தொழிலாளர்கள் ரூபாய் 25 லட்சமும் நிதி உதவி கொடுத்துள்ளார்.
ஆக மொத்தம் ரூபாய் 1.25 கோடி கொடுத்துள்ளார்.
இவை இல்லாமல் பிஆர்ஓ யூனியனுக்கு ரூபாய் 2.5 லட்சமும் கொடுத்துள்ளார்.
இத்துடன் தமிழ் சினிமா பத்திரிக்கையாளர்களின் இரண்டு சங்கங்களுக்கும் சேர்த்து ரூபாய் 2.5 லட்சம் கொடுத்துள்ளார்.











