கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து கூட மக்கள் தப்பிச்சடலாம் ஆனால் சாத்தான் குளம் போலீசாரிடம் மாட்டுனா? இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இருவரும் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் செல்போன் வியாபாரிகளான தந்தை மகன் லாக்கப் மரணம் குறித்த சம்பவத்திற்கு தமிழ் திரையுலகில் இருந்து கிட்டத்தட்ட அனைவருமே எதிர்ப்பு குரல் கொடுத்து விட்டனர்.
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காதவர்கள் நடிகர் தல அஜித்குமார் மற்றும் நடிகர் தளபதி விஜய் மட்டுமே என்ற குறை இருந்தது. இதனை அடுத்து தற்போது நடிகர் தளபதி விஜய் தரப்பில் இருந்து அவரது தந்தையும் இயக்குனரும் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சாத்தான்குளம் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா என்ற கொடிய வைரஸிடமிருந்து பயங்கரமான வைரஸிடமிருந்து கூட உயிரோடு தப்பித்து திரும்பி விடலாம்.
ஆனால் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கினால் கண்டிப்பாக உயிரோடு திரும்ப முடியாது.
இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ் அதிகாரிகள் கடவுளுடைய பிரதிநிதிகளாக கருதப்படுகிறார்கள்.
அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இதுபோன்ற சாத்தான்களா? இவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த சாத்தான்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
என்று தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்..சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான
எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் இந்த கருத்தை நடிகர் விஜய்யின் கருத்தாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதால், தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது











