சமூக அக்கறையில்லாத தளபதி விஜய் சமூக அக்கறையுடன் நடந்துகொண்ட – நடிகர் சூர்யா

உலகையே அச்சுறுத்தும் வைரசாக கொரானோ உருவெடுத்துள்ளது.

சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பெரியளவில் பரவி வருகிறது.

வட இந்தியாவிலும் கேரளாவிலும் நிறைய உயிர்களை கொரானா கொன்று குவித்து வருகிறது.

கை குலுக்க கூடாது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

இருமல் மூலம் அதிகளவில் பரவி வருவதாக விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகள் கேட்டுக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தான் நேற்று தளபதி விஜய் நடித்த மாஸ்டர் பட இசை வெளியீடு நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் அழைக்கப்படவில்லை என்றாலும் கிட்டதட்ட 1000 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதை படக்குழுவினர் நினைத்திருந்தால் தவிர்த்து இருக்கலாம். ஆன்லைனில் பாடல்களை வெளியிட்டு இருக்கலாம். ஏற்கெனவே 3 பாடல்கள் இணையத்தில்தான் வெளியானது.

ஆனால் சமூக பொறுப்பில்லாமல் மாஸ்டர் படக்குழுவினர் நடந்துக் கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் சூர்யா பொறுப்புடன் நடந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதற்கான காரணம் என்ன தெரியுமா?

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பாடல்களை நாளை மார்ச் 17ல் சத்யம் தியேட்டரில் வெளியிட இருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை இந்த நிகழ்ச்சியை ரத்து செய்து பாடல்கள் ஆன்லைனில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!