தந்தை ஜெயராஜ் & அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ஒருவருக்கு அரசு வேலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் & அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து காவல்துறையினர் தாக்குதலில் போது மரணமடைந்தனர்.
இந்த விவகாரம் மிக சர்ச்சையாக அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் பேரிலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கவுள்ள உத்தரவின்படியும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் உயிரிழந்த ஜெயராஜ் & பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.











