சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் விவகாரத்தில் இவர்களும் குற்றவாளிகள் தான் உதயநிதியின் ஆவேச டுவீட்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவ்வப்போது தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மட்டும் குற்றவாளிகள் இல்லை என்றும், மாஜிஸ்திரேட், சிறைத்துறை அதிகாரி, மருத்துவர்கள் ஆகியோர்களும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:

ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்கள் நேரடி குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களை பார்த்து மருத்துவமனைக்கு பரிந்துரைக்காத மருத்துவர், அந்த காயங்களை பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், போலீசின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்களே.

இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக கொலை வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்புகள்.

error: Content is protected !!