நடிகை வனிதாவிடம் 1.25 கோடி நஷ்ட ஈடு கேட்கும் லெட்சுமி ராமகிருஷ்ணன். லெட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2.50 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நடிகை வனிதா விஜயகுமார்
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு சமயத்தில் தனது வீட்டிலேயே மிக எளிமையாக பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார்.
அது தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களை இணையத்தில் நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட அதுவே சர்ச்சையானது.
மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவி இது தொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதனையடுத்து வனிதா விஜயகுமாரை பலரும் விமர்சிக்க தொடங்கினர்.
முக்கியமாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன் கஸ்தூரி உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதற்கு அடிக்கடி தக்க பதிலடியும் கொடுத்து வந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.
நீ பேருக்கு ஒரு புருசன் வச்சிருக்க.. எத்தனை பேரு கூட நீ இருந்தன்னேன்னு எனக்கு தெரியாதா? என நடிகை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனை நடிகை வனிதா விஜயகுமார் சரமாரியாக விமர்சித்தார்.
இதனையடுத்து தன்னை தரக்குறைவாக பேசியதாகக் குறிப்பிட்டு நடிகை வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு நடிகை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமாரும் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.











