நான்காவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா – இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான், காப்பான் ஆகிய முன்று திரைப்படங்கள் இருவர் கூட்டணியில் உருவான திரைப்படங்கள்.
இதில் அயன் திரைப்படம் தவிர மற்ற இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே சந்தித்தன.
இந்நிலையில், அந்த கூட்டணி நான்காவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது அயன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா, என்கிற திரைப்படமும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார்.
இதன்பின்னர் நடிகர் சூர்யா இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.











