மாஸ்டர் டச் அந்தகாரத்தில் ட்ரெய்லரில் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி .

தளபதி விஜய்யின் ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது படத்தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

இவர் தயாரித்துள்ள படத்திற்கு ‘அந்தகாரம்’ (DARKNESS) என்று தலைப்பிட்டு அதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

இதில் ’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார்.

இவருடன் பூஜா ராமச்சந்திரன், குமார் நடராஜன், மீஷா கோஷல், ஜீவா ரவி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விக்ன ராஜன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு பிரதீப் இசையமைத்துள்ளார்.

இப்பட டிரைலரில் ஒரு மனோதத்துவ நிபுணர் தன் முன்னால் இருப்பவரிடம் ‘புலி கூண்டிற்குள் நீ இருந்தால் அந்த புலிக்கு நீ எப்படி தெரிவாய்? என்று கேட்கிறார்.

அந்த நபர், ’அந்த கூண்டுக்குள் நீங்கள் இருந்தால் அந்த புலிக்கு நீங்கள் எப்படி தெரிவீர்கள்? என்று கேட்க அதற்கு அந்த மனோதத்துவ நிபுணர் ‘மாஸ்டர்’ என்று பதில் கூறுகிறார்.

அந்த டாக்டர் ஏன் ‘மாஸ்டர்’ என்று கூறினார் தெரியாது.

ஆனால் மாஸ்டர் என்ற வார்த்தை விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாலும் விஜய்யின் ராசியான டைரக்டர் தயாரித்துள்ள படம் என்பதாலும் இந்த ட்ரைலரை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!