விரைவில் அம்மாவாகப் போகும் டிவி நடிகை மைனா நந்தினி
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நந்தினி.
சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் பிரபலமானதால் அவரது பெயரை மைனா நந்தினி என்று மாற்றிக்கொண்டார்.
அதற்கு பிறகு அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத் தம்பி என பல டிவி தொடர்களில் அவர் நடித்து வந்தார்.
வம்சம், ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களில் காமெடி வேடங்கிலும் நடித்துள்ளார்.
நந்தினி ஏற்கனவே சென்னையில் ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர் திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கார்த்திகேயன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பிறகு கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகர் யோகேஸ்வரனை என்பவரை நடிகை மைனா நந்தினி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
விரைவில் நடிகை மைனா நந்தினி அம்மாவாக போகிறார். சமீபத்தில் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை பதிவிட்டிருந்தார் நடிகை மைனா நந்தினி.
அதில் அவரது வயிறு பெரிதாக தெரிந்ததால் ரசிகர்கள் கேள்வி எழுப்ப… ஆம் நான் அம்மா ஆக போகிறேன். இப்போது ஐந்தாவது மாதம் என்று கூறியிருக்கிறார்.











