சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை : 10 டிசம்பர் 2020

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த தொடர் மூலம் ஏராழமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை சித்ரா.

இந்த சூழ்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஹேம்நாத் ரவியை பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டார் நடிகை சித்ரா.

வரும் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் நேற்று சென்னை நசரத்பேட்டை அருகே இருக்கும்  தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.

அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கணவர் ஹேம்நாத் ரவி மீது நடிகை சித்ராவின் தாய் கூறப்பட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் சித்ராவின் நகக்கீறல்கள்தான் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அவர் தற்கொலை என செய்துள்ளார்.

அதற்கு யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணையை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.