ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் புரோமோவை வெளியிட்ட டிஸ்கவரி் சேனல்.

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் ‘மேன் VS வைல்ட்’ என்ற நிகழ்ச்சியை வழங்கி சாகசங்கள் புரிந்து வருகிறார் பியர் க்ரில்ஸ்.

இவருடன் இணைந்து பல ஹாலிவுட் நடிகைகள் காட்டுக்குள் பயணம் செய்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதும் இந்த நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமானது.

அண்மையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்காக கர்நாடகா பந்திப்பூர் காட்டுக்குள் சென்றார்.

‘இன் டூ தி வைல்ட்’ என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் பிரபலமாக ரஜினிகாந்த் உள்ளார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்பாக போகிறது என்று பலரும் காத்திருந்தனர்.

வருகிற மார்ச் 28ஆம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்போவதாக டிஸ்கவரி சேனல் புரோமோ வெளியிட்டது.

அதில் ரஜினிகாந்த் காட்டில் குவாட் வகை பைக்கை ஓட்டி வந்தார்

தற்போது மேலும் புதிதாக ஒரு வீடியோவை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது.

அதில் பாலத்தை கடப்பது, நெஞ்சளவு ஓடும் தண்ணீரில் நடப்பது என்று பல சாகசங்கள் உள்ளது.

இதுதான் உண்மையான சாகசம் என்று ரஜினிகாந்த் ஹாப்பியாக சொல்கிறார்.

error: Content is protected !!