சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்.

சென்னை 10 பிப்ரவரி 2022  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த’ திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது
திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார்.

இவர் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு இயக்குனராக அறிமுகமான இவர்,  தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து  டாக்டர் திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்

இந்த 169 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல திரைப்படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ்,  தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ் 46, சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் திரைப்படங்களை  தயாரித்து வருகிறது.

ஏற்கெனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இப்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

ஒரு வீடியோவின் மூலம் இந்த திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டாக அமர்ந்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.