அசுரன்’ திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்*

‘இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியில், ‘அசுரன்’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். கலைப்புலி S ந

தாணு தயாரிப்பில் மேலும் இந்தப் படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்திற்கு “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனிடையே இந்தப் படம் வருகின்ற 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.