அரசியலுக்கு வர துடிக்கும் ரீல் தலைவர்கள் நமது அம்மா நாளேடு*

முதல்வர் பழனிச்சாமி குறித்து விமர்சித்த ரஜினிகாந்தை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நமது அம்மா நாளேட்டில் கடுமையாக தாக்கி ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில், “தமிழகத்தில் நிறைய ரீல் தலைவர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர ரீல் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படி கிடையாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நடத்துனராக பணியை துவக்கிய ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்றும். காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!