ஆடை திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை கங்கனா ரனவுத் நடிக்கவில்லை என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு !

ஏ&பி குழுமம் சென்னையைச் சேர்ந்த முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனம், அதனது உரிமையாளர் சி.அருன் பாண்டியன் தலைமையில்

(தயாரிப்பாளர் மற்றும் நடிகர்) இந்நிறுவனம் தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் அஜித்குமார் போன்ற நடிகர்கள் மற்றும் பல நட்சத்திரங்களின் படங்களை தயாரித்துள்ளனர்.

ஏ&பி குழுமம் அமலாபால் நடித்த ‘ஆடை’ திரைப்படத்திற்கான அனைத்து மொழிகளின் ரீமேக் உரிமைகள் எங்களிடம் தான் உள்ளன, நாங்கள் ‘ஆடை’ படத்தை ஹிந்தி மொழியில் எடுக்கவுள்ளோம்,

இந்த திட்டத்திற்காக மும்பையில் ஒரு பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைத்துள்ளோம், ‘ஆடை’ ஹிந்தி ரீமேக் குறித்து நிறைய வதந்திகள் பரவிவருகிறது.

‘ஆடை’ ஹிந்தி ரீமேக் இந்திய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஒரு சரியான கதை, சிறந்த சர்வதேச தரத்துடன் ரீமேக் செய்யப்படும். ‘ஆடை’ தமிழ் திரைப்படத்தில் அமலாபால் முன்னணி கதாபாத்திரமாக, ஒரு தைரியமான பெண்ணாக நடித்திருந்தார்.

தற்போது இதன் ஹிந்தி ரீமேக்கில் நடிகை கங்கனா ரனவுத் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. எங்கள் தயாரிப்பு நிறுவனம் கங்கனா ரனவுத்தை அணுகவில்லை. மேலும் வதந்திகளை தயவுசெய்து தவிர்க்கவும், என்று ஏ&பி தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்