இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து… 3 பேர் மரணம்; மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ஓரிரு தினங்களுக்கு முன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா நிறுவனம் சார்பில் 2 கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார்.