இனி நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படங்களை தியேட்டரில் வெளிவிட செய்ய முடியாது வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ)

நடிகர் சூர்யா 2D ENTERTAINMENT தயாரிப்பில் இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.

இந்த திரைப்படம் மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளியாகவில்லை.

மார்ச் 17ம் தேதி இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு விரைவில் தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான தியேட்டர்களை நிச்சயம் திறக்க மாட்டார்கள்.

மேலும் பல திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் தியேட்டர் கிடைப்பதிலும் அதிக சிக்கல் உருவாகும்.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை திரையில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக OTT இணையதளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலர் பன்னீர் செல்வம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்…

நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட்) தயாரிப்பில் இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரிடையாக இணையத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை.

ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் (சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்) மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

R Panneerselvam
General Secretary
Tamil Nadu Theatre Owners Association

Theatre Owners Association decides they wont release Suriya movies

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தையும் நடிகர் சூர்யாவே தனது சொந்த பட நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட்) சார்பாக தயாரித்துள்ளார். எனவே இந்த படத்தின் ரிலீசுக்கு கண்டிப்பாக பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

Watch the video here…

 

https://www.instagram.com/p/B_Y6QmqDnQt/?igshid=1vvozbykwuxnu