ஒரு நாள்” – நடிகர் நந்தா குரலில் காணொளி.. ஏற்றத்தாழ்வுகளை மறந்து நம்பிக்கையுடன் இருப்போம் !
நடிகர் நந்தா ‘ஒரு நாள்’ என்கிற காணொளிக்கு குரல் கொடுத்துள்ளார்.
பாக்கி பிக்சர்ஸ் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணத்தால் லாக்டவுனுக்காக வெளியிடபட்டிருக்கும் காணொளிக்கு தான் நந்தா வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த காணொளி முழுவதும் ஊரடங்கிற்கு முன் உலகம் எப்படி இயங்கி கொண்டிருந்தது தற்போது எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்பதை ஒளியை வைத்து கதையாக கூறியுள்ளார் நந்தா.
லாக்டவுனுக்கு முன் இந்த சத்தங்களைத்தான் நாம் கேட்டோம்.
ஆனால், லாக்டவுனுக்கு பின் சைரன் சத்தம், வீட்டில் நம் குடும்பத்தின் சத்தம் மற்றும் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பினால் பல புதிய சத்தங்கள் உருவாகியிருக்கிறது என்று இந்த காணொளியில் நந்தா கூறியிருக்கிறார்.
நடிகர் நந்தா இதற்கு முன் இப்படி சிறிய காணொளிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தது கிடையாது இதுவே முதல் முறையாகும்.
நந்தாவிற்கு இருக்கும் தனித்துவமான குரல் இந்த காணொளிக்கு சரியாக பொருந்தியுள்ளது.
நடிகர் நந்தா இறுதியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் பாஸ்கரன் மற்றும் நட்ராயன் என்று இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார்.
யாரும் எதிர்பாராத அளவில் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தது அனைவரையும் ஆச்சரியபடுத்தியிருந்தார்.
நடிகர் நந்தா த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் பரமபதம் விளையாட்டு படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைப்பிடப்படாத ஒரு நடிகர் அதர்வா நடிக்கும் படத்திலும் நடிகர் நந்தா நடித்து வருகிறார் .











