ஏட்டு கிராமங்களை தத்து எடுத்து உணவு அளித்து வரும் நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு.
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தாக்கத்தால் உலகின் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ளன.
இன்னும் பல நாடுகளில் இதுவரை ஊரடங்கு உத்தரவு அமலில் தான் உள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
ஆனால் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது இன்னும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படலாம் என தெரிகிறது.
இதனால் தினக்கூலி நம்பியிருக்கும் மக்கள் அனைவரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் அவரது மகன் நடிகர் விஷ்ணு மஞ்சுவும் இணைந்து ஆந்திராவின் சந்திரகிரி தொகுதிக்கு உட்பட்ட 8 கிராமங்களை தத்தெடுத்து உணவளித்து விடுகின்றனர்.
அந்த கிராம மக்களுக்கு தினசரி இரண்டு வேளை உணவு வழங்கி வருகின்றனர்.
இதற்காக தினசரி 8 டன் காய்கறிகள் தேவைப்படுகிறதாம்.
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தற்போது வெளிநாட்டில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.