நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாக உள்ளதாம்.
சென்னை 30 மே 2021
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாக உள்ளதாம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பரவல் அதிகமாக உள்ள காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாக உள்ளதாம்.
தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் இந்த எப்.ஐ.ஆர்
திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த எப்.ஐ.ஆர் திரைப்படத்திற்கு
அஷ்வந்த் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.











