நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தில் வரும் இன்பராஜை விட மோசமானவர்கள் நிறைய பேர் உள்ளனர் இயக்குனர் ராம்குமார்.

சென்னை 25 மே 2021

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தில் வரும் இன்பராஜை விட மோசமானவர்கள் நிறைய பேர் உள்ளனர் – இயக்குனர் ராம்குமார்

ராட்சசன் திரைப்படத்தில் இன்பராஜ் என்கிற கதாபாத்திரம் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று இயக்குனர் ராம்குமார் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது பி.எஸ்.பி.பி பள்ளி.

இந்த தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், வெளியான ராட்சசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ராட்சசன் திரைப்படத்தில் இன்பராஜ் ஆக நடித்த நடிகர் வினோத் சாகர்

வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்து மீறும் இன்பராஜ் எனும் கதாபாத்திரம் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அதனை தற்போது ராஜகோபாலன் விவகாரத்தோடு ஒப்பிட்டு அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து ராட்சசன் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்

அவர் பதிவிட்டுள்ளதாவது:

“ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை.

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது.

அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்” என ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்