கன்னட தொலைக்காட்சி இளம் நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகினர் அதிர்ச்சி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்றது.

கேப்டன் மகேந்திர சிங் தோனி கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை கொடுத்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மண்டியா அருகே நடிகர் சுஷில் கவுடா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் சுஷில் கவுடா (வயது 32). இவர் கன்னடத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர்.

இவர் சலகா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் பெங்களூரில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நடிகர் சுஷில் கவுடா பணியாற்றி வந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் மண்டியா டவுனில் உள்ள தனது வீட்டில் நடிகர் சுஷில் கவுடா, குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார்.

இவர் 2015ஆம் ஆண்டு முதல் கன்னட தொலைக்காட்சிகளில் நடித்து வந்தார்.

ஆனால் நடிகர் சுஷில் கவுடா இன்னமும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நேற்று மண்டியா புறநகர் இந்துவாலு பகுதியில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டிற்கு நடிகர் சுஷில் கவுடா சென்று இருந்தார்.

நண்பரின் பண்ணை வீட்டிற்கு சென்ற நடிகர் சுஷில் கவுடா அங்கு உள்ள ஒரு அறையில் திடீரென நடிகர் சுஷில் கவுடா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக மண்டியா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் வருமானம் குறைந்து நடிகர் சுஷில் கவுடா தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

ஆனாலும் அவர் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து மண்டியா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு கன்னட திரைப்பட உலகில் பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல்நலக்குறைவால் இறந்த நிலையில் வளர்ந்து வரும் கன்னட நடிகரான சு‌ஷில்கவுடா தற்கொலை செய்து கொண்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.