எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் திரையுலகினர் அதிர்ச்சி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்றது..
கேப்டன் மகேந்திர சிங் தோனி கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை கொடுத்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இந்த திரைப்படத்தின் மூலம்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார்.
மேலும் அமீர் கானின் “பி.கே” திரைப்படத்திலும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்
இவருக்கு வயது 34 ஆகிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
எம்எஸ் தோனி திரைப்படத்தில் வாழ்க்கையில் உண்மையாக உழைத்தால் உயரத்தில் அடையலாம் என அருமையாக நடித்திருப்பார்.
ஆனால் இன்று அவருக்கு என்ன பிரச்சினையோ..? தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவடைய தற்கொலைக்கான காரணம் இன்னும் இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு நாட்கள்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் இந்தத் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.










