Monday, May 25
Shadow

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு நேரத்தில் நடிகர் தனுஷ் பர்த்டே COUNT DOWN தேவையா…?

ஆடுகளம் திரைப்படத்தில் நடித்தமைக்காக இளம் வயதிலேயே தேசிய விருதை வென்றவர் நடிகர் தனுஷ்.

இவருக்கு தமிழகத்தில் மிக அதிகமாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் தனுஷ் திரைப்படங்களை கொண்டாடுவது முதல் அவரின் பிறந்தநாளையும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகின்றனர்.

வருகிற ஜீலை மாதம் 28ஆம் தேதி நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

இதற்கு இன்னும் 97 நாட்கள் உள்ளது. ஆனால் தற்போதே நடிகர் தனுஷ் பிறந்தநாளை கொண்டாட கவுன் டவுனை தொடங்கிவிட்டனர் இவரது ரசிகர்கள்.

100 நாட்கள் உள்ளது என தொடங்கி 99.. 98 என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிசைன் செய்து இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று, ஊரடங்கு உத்தரவு என மக்கள் அவதிப்படும் வரும் வேளையில் நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த கொல வெறி டிசைன் தேவையா? இது மக்கள் மனதை புண்படுத்ததா? என நடுநிலையான நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

இதை நடிகர் தனுஷ் கண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.