Monday, May 25
Shadow

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது நிவாரண நிதியாக ரசிகர் மன்றத்திற்கு ரூபாய் 50 லட்சம் கொடுத்தாரா தளபதி நடிகர் விஜய்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றை பாதிப்பை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் வருகிற மே 3 வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

இதனையடுத்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பு பணிகளுக்காக மத்திய மாநில அரசுகளுக்கும் மற்றும் திரைப்பட சங்கங்களுக்கும் ரூபாய் 1.30 கோடியை நன்கொடையாக கொடுத்தார் தளபதி நடிகர் விஜய்.

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சமும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய்10 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூபாய 25 லட்சமும், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சமும், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சமும், புதுவை முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் என பிரித்து கொடுத்திருந்தார்.

இவையில்லாமல் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் பணம் அனுப்பியுள்ளதாகவும் மக்களுக்கு நிர்வாகிகள் ரசிகர்கள் உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 1000 நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 அனுப்பியுள்ளதாகவும், (ஆக 50 லட்சம்) இந்த பணத்தின் மூலம் தேவையான மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.