க் திரை விமர்சனம் ரேட்டிங் –2.5 /5

நடிகர் நடிகைகள் – யோகேஷ், அனிகா விக்ரமன், குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், YG மகேந்திரன்
மற்றும் பலர்.

தயாரிப்பு –தர்மராஜ் ஃபிலிம்ஸ்.

இயக்கம் – பாபுதமிழ்.

ஒளிப்பதிவு – ராதாகிருஷ்ணன்.

படத்தொகுப்பு – மணிக்குமரன்.

இசை – கவாஸ்கர் அவினாஷ்.

திரைப்படம் வெளியான தேதி – 10 டிசம்பர் 2021

ரேட்டிங் –2.5 /5

கால்பந்து வீரரான கதாநாயகன் யோகேஷ் ஒரு விளையாட்டின் போது தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது.

தலை மட்டும் காலில் காயம் ஏற்பட்டு
மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் கதாநாயகன் யோகேஷ் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக மருத்துவமனை பின் புறம் ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார்.

மருத்துவமனை பின்புறம்
கொலையை தான் பார்த்ததாக காவல் துறையில் மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்களிடம் கதாநாயகன் யோகேஷ் கூறுகிறார்.

ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள்.

மேலும் கதாநாயகன் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கொலைக்கும் கதாநாயகன் யோகேஷுக்கு சம்மந்தம் இருக்கிறதா? இல்லையா ?கொலை செய்தது யார் என்பதை கதாநாயகன் யோகேஷ் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் எந்த க் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த க் திரைப்படத்தில் வசந்த் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கதாநாயகன் யோகேஷ்.

புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார்.

கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல் நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறார்.

இவரது மனைவியாக வரும் கதாநாயகி அனிகா கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் குரு சோமசுந்தரம்.

சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார்.

இவரது நடிப்பு திரைப்படத்திற்கு பெரிய பலம். ஒய் ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

ஜீவி திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய பாபுதமிழ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

மிகவும் சிக்கலான கதையை எடுத்து இயக்கியதற்கு பெரிய பாராட்டுகள்.

திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வசனங்கள் மற்றும் காட்சிகளை கவனித்தால் மட்டுமே திரைப்படத்தின் கதை தெளிவாக புரியும் அளவிற்கு எடுத்து இருக்கிறார்.

சின்ன சின்ன வசனங்களுக்கு கூட இறுதியில் அர்த்தம் கொடுத்து இருக்கிறார்.

கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைத்திருக்கிறார்.

ராதா கிருஷ்ணனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

மொத்தத்தில் இந்த ‘க்’ திரைப்படம் ஒகே.