சக்கரை தூக்கலா ஒரு புன்னகை திரை விமர்சனம் ரேட்டிங் –2. /5.

நடிகர் நடிகைகள் – ருத்ரா, சுபிக்ஷா, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, சுபலக்ஷ்மி, சுனந்தா, மகேஷ், பீட்டர் பீட்டர் ஹார்ட்லி,,‌ மகேஷ் பத்மநாபன்
மற்றும் பலர்.

இயக்கம் – மகேஷ் பத்மநாபன்.

ஒளிப்பதிவு – பிஜி விஷ்வநாத்

படத்தொகுப்பு – சுதாகர்.

இசை – ராஜேஷ்.

தயாரிப்பு – நபிஷா பிலிம் புரொடக்சன்ஸ்.

ரேட்டிங் –2.5 /5

ஆடியோகிராபியில் தங்கப்பதக்கம் வென்ற கதாநாயகன் ருத்ரா சிறந்த ஒலிப்பதிவாளராக இருக்கிறார்.

கதாநாயகன் ருத்ரா தனது
பாட்டி, தந்தை அத்தையுடன் வசித்து வருகிறார்.

சென்னையில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் கதாநாயகி சுபிக்ஷா ஒலிகள் சம்பந்தமாக டாகுமெண்டரிக்காக கதாநாயகன் ருத்ரா சந்திக்கிறார்.

அந்த சமயத்தில் இயற்கை ஒலிகளை பதிவு செய்ய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

அதனை தேடி, ஒலி பதிவு செய்வதில் கைதேர்ந்தவரை தேடி செல்கிறார் கதாநாயகி சுபிக்ஷா.

அப்பொழுது கதாநாயகன் ருத்ரா என்ற ஒலி வல்லுனரின் அறிமுகம் கதாநாயகி சுபிக்ஷாவிற்க்கு கிடைக்கிறது.

இருவரும் சேர்ந்து ஒலி பதிவு செய்ய பயணிக்கிறார்கள்.

இருவருக்கும் அந்த ஒலி பதிவு செய்ய செனற பயணத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது.

கதாநாயகன் ருத்ராவுடன் சேர்ந்து கதாநாயகி சுபிக்ஷா சிறப்பாக ஒலிப்பதிவு செய்து வேலையை முடித்து விட்டு சென்னைக்கு கிளம்புகிறார்.

பதிவு செய்த ஒலிகளுக்கு பல விருதுகளும் அங்கிகாரமும் கிடைக்கிறது.

அதன் பின் அந்த டாகுமெண்டரிக்காக கதாநாயகி சுபிக்ஷாவிற்கு பரிசு கிடைக்க, பிபிசியில் ஆடியோ டாகுமெண்டரி செய்ய அழைப்பு வர, அதில் பெரிய அளவில் முன்னேற கதாநாயகன் ருத்ராவை சென்னைக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார்.

பிறகு மீண்டும் அவர்களுக்கு மேளதாளங்களை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்க, இருவரும் பயணிக்கிறார்கள்.

இருவரும் காதலர்களாக வலம் வந்தாலும் கதாநாயகி சுபிக்ஷா தன்னுடைய வேலையில் மட்டும் கவனமாக இருப்பதையும் தான் ஆரம்பித்த பணிகளை முடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதை அறிந்து கொள்கிறார் கதாநாயகன் ருத்ரா.

கதாநாயகி சுபிக்ஷாவின் நடவடிக்கைகள் பிடிக்காவிட்டாலும் கதாநாயகன் ருத்ரா கதாநாயகி சுபிக்ஷா மீது இருக்கும் காதலால் வேண்டா வெறுப்பாக தங்குகிறார்.

இவர்கள் காதல் ஆரோக்கியமாக சென்று கொண்டிருக்கிற நேரத்தில் அமெரிக்கருடன் நெருங்கி பழகுகிறார் கதாநாயகி சுபிக்ஷா.

இது பிடிக்காத கதாநாயகன் ருத்ரா சண்டையிட்டு சுபிக்ஷாவுடனான காதலை முறித்துவிடுகிறார்.

இதனிடையே கதாநாயகி சுபிக்ஷாவின் கணவர் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவிலிருந்து ஒருவர் வர, கதாநாயகன் ருத்ரா வேறு வழியின்றி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்து விடுகிறார்.

கதாநாயகன் ருத்ராவை தேடி சுயநலத்திற்காக கதாநாயகி சுபிக்ஷா மீண்டும் ஊருக்கு வந்து கதாநாயகன் ருத்ராவை அழைக்கிறார்.

Read Also  திரெளபதி திரை விமர்சனம். ரேட்டிங் - 3./5

இறுதியில் கதாநாயகன் ருத்ரா என்ன முடிவு எடுத்தார்? கதாநாயகி சுபிக்ஷா விரித்த வலையில் வீழ்ந்தாரா? கதாநாயகி சுபிக்ஷாவுடன் சென்றாரா? இல்லை அவரை விட்டு விலகினாரா? என்பதுதான் சக்கரை தூக்கமாக ஒரு புன்னகை திரைப்படத்தின் மீதிக்கதை.

மலையாள திரைப்படத்தில் நடித்த ருத்ரா இந்த படத்தில் கதாநாயகனாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகியிருக்கிறார்.

கதிர் கதாப்பாத்திரத்தில் ஒலிகளை பதிவு செய்ய மலைகள், அருவிகள், காடு,மலை, மேடுகள் என்று உபகரணங்களை வைத்துக் கொண்டு செல்லும் காட்சியில் பல இடர்பாடுகளை சந்தித்தாலும் யதார்த்தமாகவும், மலையாளம் கலந்த தமிழில் நிதானமாக வார்த்தைகளை சொந்தமாக பேசி அமைதியாக உணர்ச்சிகளை வெளிக்காட்டி நடித்திருப்பதற்காக பாராட்டுக்கள்.

அவருடைய நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருந்தாலும் சில இடங்களில் புதுமுக கதாநாயகன் என்ற தோற்றம் வெளிப்படையாக தெரிகிறது.

இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகராக பல்வேறு திரைப்பட விழாவில் விருது பெற்ற அறிமுக நாயகன் ருத்ரா.

கடுகு, கோலி சோடா 2 போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் அறிமுகமானவர் சுபிக்‌ஷா.

இந்த திரைப்படத்திலும் அவருடைய வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார்.

கதாநாயகி ஸ்ருதியாக சுபிக்ஷா காரியவாதியாக, எதற்கும் துணிந்த தைரியம் மிகுந்த பெண்ணாக, சுயநலமாக யோசிக்கும்  நவீன கால பெண்ணின் நடவடிக்கைகளுடன் வாழும் பெண்ணாக வருகிறார்.

ஆனால், சில இடங்களில் இவருடைய நடிப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுடன் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் திரைப்படத்திற்கு பக்கபலம்.

சிறிய கதையை வைத்து கொண்டு ஒரு முழு நீள திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன்.

கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம்.

சில இடங்களில் திரைக்கதை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

ஒளிப்பதிவு பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார் பிஜு விஸ்வநாத்.

ராஜேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

ஒலி சம்மந்தப்பட்ட திரைப்படம் என்பதால், தனி கவனம் செலுத்தி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ திரைப்படம் சர்க்கரை இல்லை என்பதால் இனிக்கவில்லை.