சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் -2019 – கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார் !
65 ஆண்டு பாரம்பரியமும் பிரபல தினசரிகள், வார , மாத இதழ்கள் , சாட்டிலைட் தொலைக்காட்சிகள் மற்றும் பண்பலை வானொலிகள் என பல்வேறு செய்தி ஊடகங்களிலும் யூடியுப் , டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் சினிமா செய்தியாளர்களாகவும் , புகைப்பட கலைஞர்களாகவும் , வீடியோ ஒளிப்பதிவாளர்களாகவும் திகழும் 200 பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாகக்கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் தீபாவளி மலர் வெளியிடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான
தீபாவளி மலர் – 2019 புத்தகத்தை , பொக்கிஷத்தை…
சங்க கெளரவ ஆலோசகர்களும் சீனியர் உறுப்பினர்களுமான கலைமாமணி திரு நெல்லை சுந்தர்ராஜன் , திரு.மேஜர் தாசன் , சங்கத் தலைவர் திரு. பாலேஷ்வர் , செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் , பொருளாளர் திரு. மதிஒளிகுமார் , செயற்குழு உறுப்பினர்கள் திரு.ரமேஷ் பாபு , திரு.சேவியர் , திரு.வின்சன் , திரு.ராமானுஜம் , திரு.சுகுமார் , திரு.மோகன், திரு.பிரபாகர் மற்றும் திரு.விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் புடைசூழ ., பிரபல தயாரிப்பாளர் திரு.கலைப்புலி எஸ்.தாணு வெளியிட ., பிரபல இயக்குனர்கள் ”ஊமை விழிகள் ‘ ஆர்.அரவிந்தராஜ், ‘திருடா திருடி ‘சுப்ரமணியம் சிவா இருவரும் பெற்றுக் கொண்ட போது எடுத்த படங்கள் இங்கு உங்கள் பார்வைக்காக ! நன்றி