சிரஞ்சீவியுடன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘சயிரா நரசிம்மரெட்டி’ அப்டேட்

சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘சயிரா நரசிம்மரெட்டி’. இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, கிச்சா சுதீப் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் படத்திற்கு “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் தணிகையின் போது இந்தப் படத்தின் காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.