இணையவழி திரையரங்கு டிக்கெட்டுகள் முன்பதிவு விவகாரம் – செப் 27ல் பேச்சுவார்த்தை!?
திரையரங்குகளில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும் போது, வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக புகார் வந்து கொண்டு இருக்கிறது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இணைய வழியாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி தலைமை செயலகத்தில், அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.











